/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக சிட்டுக்குருவிகள் தினம்: அரசு பள்ளியில் கொண்டாட்டம்
/
உலக சிட்டுக்குருவிகள் தினம்: அரசு பள்ளியில் கொண்டாட்டம்
உலக சிட்டுக்குருவிகள் தினம்: அரசு பள்ளியில் கொண்டாட்டம்
உலக சிட்டுக்குருவிகள் தினம்: அரசு பள்ளியில் கொண்டாட்டம்
ADDED : மார் 22, 2024 07:12 AM
கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச், 20ல் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. பசுமைத்தோழர் நட்டார் கனி முன்னிலை வகித்தார். இதில், மாணவியர் பறவைகளுக்கு கூடுகட்டி, உணவும், நீரும் வைத்து மகிழ்ந்தனர்.
தலைமை ஆசிரியர் வளர்மதி வரவேற்று பேசுகையில், ''இன்று அழிந்து வரக்கூடிய பறவைகளில் சிட்டுக்குருவியும் ஒன்று. அவற்றை பாதுகாக்க அதை நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும். முடிந்தவரை மாடி மீது, தினமும் குடிப்பதற்கு தண்ணீர் வைக்கலாம். இப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 2.70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பள்ளியில், தெளிப்பு நீர் பாசன முறையில் தோட்டம் பராமரிக்கப்படுகிறது. பள்ளியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் வந்து அமரும்போது, அவை உண்ண தானியங்களும், அவற்றிற்கு நீரும், இளைப்பாற அட்டைப்பெட்டியில் கூடுகளையும், மாணவியர் மரக்கிளைகளில் கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால் ஏராளமான பறவைகள், இங்கு வந்து அமர்ந்து செல்கின்றன,'' என்றார்.

