/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நேற்றைய போக்சோ: சிக்கிய 'சேட்டைகார' ஆசிரியர்
/
நேற்றைய போக்சோ: சிக்கிய 'சேட்டைகார' ஆசிரியர்
ADDED : மார் 20, 2025 01:30 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தவர், 17 வயது மாணவி. இவருக்கு அஞ்சூர் - ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தேர்வெழுத சென்ற மாணவியிடம், தேர்வு மைய மேற்பார்வையாளராக இருந்த வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் ரமேஷ், 41, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்த புகாரின்படி, நேற்று முன்தினம் இரவு, ஆசிரியரிடம் போலீசார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமேஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் படி, ஆசிரியரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
சபல சலுான்காரர் கைது
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த தென்மாம்பாக்கத்தை சேர்ந்தவர் குமார், 44; சலுான் கடை உரிமையாளர். திருமணமாகாத அவர், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். தகவலறிந்த மாணவியின் பெற்றோர் புகாரின்படி நெமிலி போலீசார், குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.