ADDED : ஜூன் 03, 2026 03:02 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி அருகே உள்ள, கூர்சம்பட்டி புதுாரை சேர்ந்தவர் சென்னையன். கூலித்தொழிலாளி.
இவர் மனைவி கவியரசி, 26. இவர்களுக்கு, 7 ஆண்டுக்கு முன் திருமணமாகி, கூர்சம்பட்டி புதுார் கிராமத்தில் வசித்து வந்தனர். சென்னையன் கூலி வேலைக்காக கோவை சென்றார்.கடந்த, 30ம் தேதி மாலை, கவியரசி மருத்துவமனை செல்வதாக கூறி, தன் தந்தை ஊரான செலகாரம்பட்டிக்கு சென்றார். பிறகு, 31ம் தேதி கூர்சம்பட்டி புதுார் கிராமத்திலுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் எடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. கவியரசியின் தந்தை சங்கர் புகார் படி, சாமல்பட்டி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் விசாரிக்கிறார்.
