ADDED : அக் 10, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை விஜயா நகரை சேர்ந்தவர் கணேஷ், 22. இவரது மனைவி மோகனாஸ்ரீ, 19. இவர் தனது கணவரிடம், தனியாக குடும்பம் நடத்த வேண்டும் என கேட்டுள்ளார்.
ஆனால், கணேஷ் தனியாக செல்ல மறுத்து விட்டதால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோகனாஸ்ரீ கடந்த, 6ம் தேதி மதியம், 2:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் திரும்பி வராததால், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் கணேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, மாயமான மோகனாஸ்ரீயை தேடி வருகின்றனர்.
