/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்
/
வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்
ADDED : மே 05, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி:வெப்பத்தை தணிக்க இளைஞர்கள், கிணறுகளில் ஆனந்த குளியல் போடுகின்றனர்.
கிருஷ்ணகிரி
மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி, பாரூர், பண்ணந்துார்
உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலினால் வெப்பம் வாட்டி வதைக்கிறது.
இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள், ஆறுகள்
உள்ளிட்டவைகளில் தண்ணீர் இன்றி இருக்கிறது. இதனால் இளைஞர்கள்
வெப்பத்தை தணிக்க, வேறு வழியின்றி விவசாய கிணறுகளில் ஆனந்த குளியல்
போட்டு வருகின்றனர். திரும்பிய பக்கம் எல்லாம் ஆங்காங்கே விவசாய
கிணறுகளில் இளைஞர்கள், ஆனந்த குளியல் போடும் நிகழ்வு காணப்படுகிறது.