/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஐ.டி., ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
/
ஐ.டி., ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
ADDED : நவ 06, 2024 01:15 AM
ஐ.டி., ஊழியரை
தாக்கிய வாலிபர் கைது
ஓசூர், நவ. 6-
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த சங்கேப்பள்ளியை சேர்ந்தவர் சேட்டன், 25. பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; இவரும், அதே பகுதியை சேர்ந்த திலிப்குமார், 27, என்பவரும் நண்பர்கள். திலிப்குமார் மீது, தளி போலீஸ் ஸ்டேஷனில் இரு கொலை வழக்குகள் மற்றும் கூட்டு கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது என, மூன்று வழக்குகள் உள்ளன. கடந்த, 3 இரவு, 7:00 மணிக்கு திலிப்குமார் வீட்டின் முன் சேட்டன் நடந்து சென்றார்.
அப்போது திலிப்குமார், சேட்டனை அழைத்த நிலையில், அவர் பதிலளிக்காமல் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த திலிப்குமார், தனது நண்பரான நாகசந்திரம் கிராமத்தை சேர்ந்த ஹரிபிரசாத், 27, என்பவருடன் சேர்ந்து சேட்டனை தகாத வார்த்தையால் திட்டி, நெற்றியில் செங்கலால் தாக்கி கொலை மிரட்டல்
விடுத்தார்.
இதில் காயமடைந்த சேட்டன், தளி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, ஹரிபிரசாத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திலிப்குமாரை தேடி வருகின்றனர்.