ADDED : பிப் 28, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; சூளகிரி தாலுகா, நல்லகானகொத்தப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராயப்பா, 55, விவசாயி.
இவர், கடந்த 26ல், சூளகிரி அருகே உஸ்தலப்பள்ளியில் நடந்த, எருது விடும் விழாவை பார்க்க சென்றார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த, 9,500 ரூபாயை அங்கிருந்த நபர் திருடி தப்ப முயன்றார். இதை கவனித்த திம்மராயப்பா, அக்கம் பக்கத்-தினர் உதவியுடன் அவரை பிடித்து சூளகிரி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் பிடி-பட்டவரின் பெயர் ரமேஷ், 32, என்பதும் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் என்-பதும் தெரிந்தது.- அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
