/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாலிபர் அடித்து கொலை; காதலி உட்பட 4 பேர் கைது
/
வாலிபர் அடித்து கொலை; காதலி உட்பட 4 பேர் கைது
ADDED : ஏப் 28, 2025 12:23 AM

தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த காரண்டப்பள்ளி அருகே கல்குவாரி குட்டையில், கயிறு சுற்றப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் அழுகிய நிலையில் நேற்று முன்தினம் மிதந்தது. தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணையில், சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த வேலுமணி, 27, என தெரிந்தது.
இது தொடர்பாக, குந்துக்கோட்டையை சேர்ந்த மோகன்பாபு, 31, மதுசூதனன், 23, பி.செட்டிப்பள்ளியை சேர்ந்த ஷில்பா, 28, அவரது கணவர் மஞ்சுநாத், 32, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
ஓசூரில் வேலுமணி ஒன்பது மாதங்களாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, பி.செட்டிப்பள்ளி மஞ்சுநாத், தன் மனைவி ஷில்பாவுடன் தங்கி பணியாற்றி வந்தார். அருகருகே வீடு என்பதால், வேலுமணி, ஷில்பா இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்தாண்டு ஜூலையில் தன் இரு குழந்தைகளை வீட்டிலேயே விட்டு, வேலுமணியுடன் ஷில்பா ஆந்திரா சென்று தங்கினார்.
அங்கு ஏற்பட்ட பிரச்னையால் கடந்த, 9ல் ஷில்பா ஊர் திரும்பியுள்ளார். மாமியார் வீட்டார் அழைத்து செல்லாததால், அவரது சொந்த ஊரான குந்துக்கோட்டையில், அண்ணன் மோகன்பாபு வீட்டிற்கு சென்றார். அவரை தேடி கடந்த, 10ல் வேலுமணி சென்றுள்ளார். ஷில்பாவை சமாதானம் செய்து அனுப்பி வைப்பதாக கூறி, அவரையும் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
மோகன்பாபு திட்டம் தெரியாமல் வேலுமணி தங்கியுள்ளார். இந்நிலையில், தன் உறவினரான குந்துக்கோட்டை மதுசூதனன், ஷில்பா, அவரது கணவர் மஞ்சுநாத் ஆகியோருடன் சேர்ந்து, ௧௩ம் தேதி வேலுமணியை கட்டையால் அடித்து கொன்றுள்ளனர். சடலத்தை குவாரி குட்டையில் கல்லை கட்டி வீசியுள்ளனர். சடலம் மிதந்ததால் நான்கு பேரும் சிக்கி விட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

