/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி தனியார் நிறுவனம் முன் உறவினர்கள் மறியல்
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி தனியார் நிறுவனம் முன் உறவினர்கள் மறியல்
கழிவுநீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி தனியார் நிறுவனம் முன் உறவினர்கள் மறியல்
கழிவுநீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி தனியார் நிறுவனம் முன் உறவினர்கள் மறியல்
ADDED : நவ 03, 2024 02:42 AM
ஓசூர்: ஓசூரில், தனியார் நிறுவன கழிவுநீர் தொட்டியில் விழுந்த வாலிபர் பலியான நிலையில், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த முதுகானப்பள்ளி அருகே சக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் நவீன், 27. பேலகொண்டப்பள்-ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு மேல், கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஏறி, சுத்திக-ரிப்பு பணி சரியாக நடக்கிறதா என பார்வையிட்டபோது, தவறி கழிவு நீர் தொட்டியில் விழுந்ததில் பலியானார். மத்திகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர். இதற்கிடையே, நவீன் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு
நிரந்தர வேலை கேட்டு, வி.சி., கட்சியின் கிருஷ்ணகிரி லோக்-சபா தொகுதி செயலாளர் செந்தமிழ், தி.மு.க., ஒன்றிய கவுன்-சிலர் சம்பத்குமார் ஆகியோர் தலைமையில், நவீனின் உறவி-னர்கள், 80க்கும் மேற்பட்டோர், அந்த தனியார் நிறுவனம் முன், தளி சாலையில் நேற்று காலை, 9:40 மணிக்கு மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் ஏ.எஸ்.பி., அக்ஜய் அணில் வாகரே மற்றும் தனியார் நிறு-வனம் தரப்பில் டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த நவீன் குடும்-பத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், 40 லட்சம் ரூபாய் இழப்-பீடு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது. நிறுவனம் முன் போலீசார் தொடர்ந்து பாது-காப்பு பணியில் ஈடுபட்டனர்.