/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒற்றை யானை தாக்கி வாலிபர் படுகாயம்
/
ஒற்றை யானை தாக்கி வாலிபர் படுகாயம்
ADDED : ஜூலை 08, 2025 01:18 AM
கெலமங்கலம், கெலமங்கலம் அடுத்த காடுலக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் மாதேஷ், 26. தனியார் நிறுவன ஊழியர்; நேற்று காலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது, காடுலக்கசந்திரம் வனத்தில் இருந்து வெளியேறி விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவரை விரட்டி சென்று தாக்கி துாக்கி வீசியது. இதில் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கெலமங்கலம் போலீசார் மற்றும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.