ADDED : ஜூலை 24, 2026 02:12 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையிலுள்ள பழைய நுாலக அலுவலகம் அருகே உள்ள மின் கம்பத்தில் நேற்று காலை, 11:00 மணிக்கு, குரங்கு ஒன்று மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது.
அவ்வ-ழியே சென்ற பலர், இதை வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர். இந்நிலையில், வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மூர்த்தி, சர-வணன் மற்றொரு சரவணன் ஆகியோர் தங்களிடம் இருந்த நீரை குரங்கின் வாயில் ஊற்றி, எதிரிலுள்ள கால்நடை மருத்துவம-னையில் சேர்த்தனர். அங்கு குரங்கிற்கு ஊசி போடப்பட்டு, குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு, சுயநி-னைவுக்கு வந்த குரங்கை, அருகிலுள்ள வனத்துறை அலுவலகத்-திற்கு கொண்டு சென்று, வன அலுவலர் சீதாராமனிடம் ஒப்ப-டைத்தனர். அவர், ''2 வயது மதிக்கத்தக்க ஆண் குரங்கை, ஒரு நாள் கண்காணிப்பதற்காக கூண்டில் வைத்து, உணவு வழங்கி, பின்னர் காட்டில் விடப்படும்,'' என்றார்.
