/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எட்டு ஆண்டு ஆஜராகாமல் டிமிக்கி போலீஸ் எஸ்.ஐ.,க்கு கைது வாரன்ட்
/
எட்டு ஆண்டு ஆஜராகாமல் டிமிக்கி போலீஸ் எஸ்.ஐ.,க்கு கைது வாரன்ட்
எட்டு ஆண்டு ஆஜராகாமல் டிமிக்கி போலீஸ் எஸ்.ஐ.,க்கு கைது வாரன்ட்
எட்டு ஆண்டு ஆஜராகாமல் டிமிக்கி போலீஸ் எஸ்.ஐ.,க்கு கைது வாரன்ட்
ADDED : ஜூலை 12, 2011 12:16 AM
மதுரை : மதுரை தென்பழஞ்சி அருகே வெள்ளப்பாரப்பட்டியை சேர்ந்த நாகமலையான்.
இவரது அண்ணன் முத்தனன். இவர், இறந்து விட்டார். இவரது மகள் புலியம்மாள். இவரை 2002ல் கும்பல் கடத்தியது. நாகமலைப்புதுக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ., பாபுவிடம் (தற்போது சிலைமான்), நாகமலையான் புகார் கூறினார். வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து எஸ்.பி.,யிடம் புகார் கூறினார். கோபமடைந்த எஸ்.ஐ., பாபு 2002 நவ.,24ல், வீட்டில் தனியாக இருந்த நாகமலையான் மனைவி கச்சம்மாளிடம் தகராறு செய்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த ஜீவா, சுட்டிமாயன் மனைவி வேந்தம்மாள், தெய்வேந்திரன் மனைவி பஞ்சம்மாள், சிவன்காளை ஆகியோர் எஸ்.ஐ.,க்கு ஆதரவாக கச்சம்மாளை தாக்கியுள்ளனர். எஸ்.ஐ., உட்பட ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மதுரை சி.ஜெ.எம்., கோர்ட்டில் நாகமலையான் 2003ல் வழக்கு தொடர்ந்தார். இதில், தொடர்ந்து எட்டு ஆண்டாக ஐந்து பேரும் ஆஜராகவில்லை. பலமுறை வாரன்ட் பிறப்பித்தும் பயனில்லை. எஸ்.ஐ., உட்பட ஐந்து பேரையும் ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து, நீதிபதி ஜோசப் டேவிட் உத்தரவிட்டார்.