/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணம் கொடுக்காமல் கொடுத்ததாக கூறி மோசடி :2 பேர் கைது
/
பணம் கொடுக்காமல் கொடுத்ததாக கூறி மோசடி :2 பேர் கைது
பணம் கொடுக்காமல் கொடுத்ததாக கூறி மோசடி :2 பேர் கைது
பணம் கொடுக்காமல் கொடுத்ததாக கூறி மோசடி :2 பேர் கைது
ADDED : ஜூலை 15, 2011 01:31 AM
செக்கானூரணி : செக்கானூரணி பகுதியில் பணம் கொடுக்காமல் கொடுத்ததாக கூறி பணம் பறிக்கும் நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்தி காரை பறிமுதல் செய்தனர்.
செக்கானூரணியைச் சேர்ந்த பாண்டித்தேவர் மகன் செல்லப்பாண்டி(41). ஸ்வீட் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கடையில் இருந்தார். அப்போது ஒரு அம்பாசிடர் காரில்(டி.என்.59 ஏ 1400) இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் மிக்சர் வாங்கிக்கொண்டு ரூ.100 கொடுத்து மீதம் பணத்தை பெற்றுக் கொண்டார். இன்னொருவர் குளிர் பானம் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் ரூ.100 கொடுத்ததாகவும், மீதம் பணத்தை தருமாறும் கேட்டு தகராறு செய்தனர். செல்லப்பாண்டி மறுக்கவே அவரை மிரட்டினர். செல்லப்பாண்டி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி கும்பலைச் சேர்ந்த கன்னியம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகைச்சாமி மனைவி மாரியம்மாள்(35), இதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்துப்பாண்டி(19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நரியம்பட்டியைச் சேர்ந்த பேக்காமன், இவரது மனைவி ஜோதி ஆகியோரை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் காரில் சென்று திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரூ.100 மொய் எழுதி விட்டு அதற்காக ரூ.500ஐ கொடுப்பது போன்று நடித்து, அந்த பணத்தை பையில் வைத்துக் கொண்டு மீதம் ரூ.400 கொடுங்கள் என்று கேட்டு மோசடியாக பணம் பறிப்பது, ஓட்டல்கள், ÷ஷாரும்களில் பொருட்கள் வாங்கி விட்டு பணம் கொடுக்காமலே பணம் கொடுத்ததாக மோசடி செய்வது என்று பல இடங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த கும்பலில் ஏராளமானோருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.