தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு

காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு

காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு


ADDED : மே 20, 2025 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமராவதி : ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் அமர்ந்து குழந்தைகள் 4 பேர் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால் 4 பேரும் உயிரிழந்தனர்.10 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும் நீண்ட நேரம் காருக்குள் சிக்கி, மூச்சு திணறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உதய் 8, சாருமதி 8, சாரிஷ்மா 6, மானஸ்வி 6, என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

3 பேர் பலி: ஆந்திராவின் சித்துார் மாவட்டத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூன்று குழந்தைகள் மூழ்கி இறந்தனர்.

இறந்தவர்கள் ஷாலினி 5, அஸ்வின் 6, கவுதமி 8, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us