/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
/
கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
கர்ப்பிணியை தள்ளி விட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
ADDED : பிப் 15, 2025 05:47 AM
வேலுார்: கோவையிலிருந்து, திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்-பிரஸ் ரயிலில் கடந்த, 6ம் தேதி பயணம் செய்த, 36 வயது கர்ப்-பிணி பெண்ணை, கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ஹேமராஜ், 28, என்பவர் பலாத்காரம் செய்ய முயன்றபோது,
எதிர்ப்பு தெரி-வித்த கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்-துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஹேமராஜை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்துள்ள நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் சிசு இறந்தது. ஹேமராஜ் மீது பிறக்காத குழந்தையை கொன்றதாக, மேலும் ஒரு வழக்கை ரயில்வே போலீசார் பதிவு செய்துள்ளனர்.