நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை அமைக்க பூஜை
தாராபுரம், டிச. ௧-
தாராபுரம் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூஜை நடந்தது.
தாராபுரம் ஒன்றியம் தளவாய்பட்டினம் ஊராட்சி, சென்னாக்கல்பாளையம் ஆதி திராவிடர் காலனியில், அயோத்திதாச பண்டிதர் நிதி திட்டத்தில், ௨1 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூஜை, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் நேற்று நடந்தது. தாராபுரம் யூனியன் சேர்மேன் செந்தில்குமார், துணைதலைவர் சசிகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

