ADDED : மார் 23, 2024 05:52 AM
பஸ் வசதி தேவை
வாடிப்பட்டியில் இருந்து அலங்காநல்லுார், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல் வழியாக மாட்டுத்தாவணிக்கு பஸ் வசதி வேண்டும். போக்குவரத்து கழக அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
- சென்னகிருஷ்ணன், அலங்காநல்லுார்.
ரோட்டை சீர் செய்ய வேண்டும்
மதுரை சிம்மக்கல் காமாட்சிபுரம் அக்ரஹாரத்தில் இருந்து அனுமார் கோயில் செல்லும் வழியில் நடமாட முடியாதபடி ரோடு சிதிலமடைந்து கிடக்கிறது. டூவீலரில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆனந்த லட்சுமி, சிம்மக்கல்.
அடிப்படை வசதி தேவை
மதுரை விளாங்குடி மீனாட்சி நகர் பழைய பாண்டியன் தியேட்டர் அருகில் குடிநீர் குழாய் மட்டும் உள்ளது. தண்ணீர் வசதி, பாதாள சாக்கடை வசதி இல்லை. ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாண்டியராஜன், விளாங்குடி.
வேகத்தடை தேவை
மதுரை மீனாம்பாள்புரம்-குலமங்கலம் மெயின் ரோடு, எல்.ஐ.சி., காலனி 2வது தெரு சந்திப்பில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- அபுபக்கர், மீனாம்பாள்புரம்.
கழிவுநீர் தேக்கம்
மதுரை தத்தனேரி மேல வைத்தியநாதபுரம் ஏ.வி.எம்., பள்ளி பின்புறம் பாதாள சாக்கடை உடைந்து துர்நாற்றம் வீசுகிறது.
கொசு உற்பத்தி பெருகி நோய் தொற்று ஏற்படுகிறது. குழந்தைகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய்தாஸ், தத்தனேரி.
