ADDED : ஆக 28, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் லிம்ராஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் நாயகம் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
இதில் தனித்திறனில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள் மற்றும் குழுப் போட்டி நடந்தது. மேல அனுப்பானடி தாய்கலை சிலம்பம் மற்றும் கிராமிய கலைக்கூடம் மாணவ, மாணவியர் 100 பேர் சிலம்பம் ஆசிரியர் திங்களரசன் தலைமையில் முதல் பரிசு பெற்றனர். நடிகர் சசிகுமார் பரிசு வழங்கினார்.
தனித்திறன் போட்டியிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் இவர்கள் பெற்றனர்.