/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்ட கூடைப் பந்து சவுராஷ்டிரா கல்லுாரி சாம்பியன்
/
மாவட்ட கூடைப் பந்து சவுராஷ்டிரா கல்லுாரி சாம்பியன்
மாவட்ட கூடைப் பந்து சவுராஷ்டிரா கல்லுாரி சாம்பியன்
மாவட்ட கூடைப் பந்து சவுராஷ்டிரா கல்லுாரி சாம்பியன்
ADDED : செப் 05, 2024 04:06 AM

திருப்பரங்குன்றம், : மாவட்ட கூடைப்பந்து போட்டிகளில் சவுராஷ்டிரா கல்லுாரி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிகள் நடந்தது.
'நாக் அவுட்' முறையில் நடந்த இப்போட்டிகளில் 15 கல்லுாரி அணியினர் பங்கேற்றனர். இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா கல்லுாரி அணியினர் 19--9 என்ற புள்ளி கணக்கில் தியாகராஜர் கலைக்கல்லுாரி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களை கல்லுாரி தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்ஷிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முரளிதாஸ், முதல்வர் சீனிவாசன், முன்னாள் முதல்வர் ரவிச்சந்திரன், விளையாட்டு குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜீவப்பிரியா, விஷ்ணு பிரியா, குபேந்திரன், பாலாஜி, செந்தில்குமார், டீன் கவிதா, நாக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பாராட்டினர்.