/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூட்டுறவு ரேஷன் கடைகளில் பெண் விற்பனையாளர்களை கொடுமைப்படுத்தாதீங்க... எடையிடுவது, மூடையை சுமப்பது கூட அவர்கள் தான்
/
கூட்டுறவு ரேஷன் கடைகளில் பெண் விற்பனையாளர்களை கொடுமைப்படுத்தாதீங்க... எடையிடுவது, மூடையை சுமப்பது கூட அவர்கள் தான்
கூட்டுறவு ரேஷன் கடைகளில் பெண் விற்பனையாளர்களை கொடுமைப்படுத்தாதீங்க... எடையிடுவது, மூடையை சுமப்பது கூட அவர்கள் தான்
கூட்டுறவு ரேஷன் கடைகளில் பெண் விற்பனையாளர்களை கொடுமைப்படுத்தாதீங்க... எடையிடுவது, மூடையை சுமப்பது கூட அவர்கள் தான்
ADDED : ஜூன் 27, 2024 04:44 AM
மதுரை : கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில் 1000 கார்டுகள் இருந்தால் கூட விற்பனையாளர் ஒருவரே அனைத்து வேலையும் செய்ய வேண்டியுள்ளது. சம்பளமும் பற்றாக்குறையாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் (டாக்பியா) கூறியதாவது:
கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் என்ற பெயரில் தான் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இரண்டிலும் விற்பனையாளர்களுக்கு ஒரேவித பணி தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு சம்பளம் ரூ.15 ஆயிரம், அகவிலைப்படி நியமிக்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை விற்பனையாளர்களுக்கு சம்பளம் ரூ.6000 மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரே வித வேலைக்கு சமமற்ற ஊதியம் வழங்கப்படுவது குறித்து கேட்டால் வாணிப கழகம் லாபத்தில் இயங்குகிறது. கூட்டுறவுத்துறைக்கு அரசு மானியம் வழங்குகிறது என்கின்றனர். வாணிப கழக கடைகளில் குறைந்தளவு கார்டுகள் இருந்தாலும் விற்பனையாளர், எடையாளர்கள் உள்ளனர்.
உதவிக்கு ஆள் இல்லை
கூட்டுறவுத் துறையில் நகர்ப்புற கடைகளில் 800 கார்டுகளுக்கு மேல் இருந்தால் தான் எடையாளர் பணியிடம் நிர்ணயிக்கின்றனர். அதை விட குறைந்த கார்டுகளுக்கு விற்பனையாளர் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் 1000 கார்டுகள் இருந்தாலும் விற்பனையாளர் ஒருவர் மட்டுமே உள்ளார்.
பெண் விற்பனையாளராக இருந்தால் அவரே எடையிடுவது, மூடை துாக்குவது, பில் போடுவது, பணம் வசூலிப்பது போன்ற வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி ரேஷன் கடைக்குள் பத்தடி உயரம் வரை வரிசையாக அடுக்கி வைப்பர். அதை பெண்களால் இறக்க முடியாதநிலையில் அந்த பகுதியில் உள்ள யாரையாவது சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்களின் வேதனையை சொல்லி மாளாது. நகர்ப்புறமோ, கிராமப்புறமோ 500 கார்டுகளுக்கு மேல் இருந்தால் விற்பனையாளருடன் எடையாளர் பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே விதமான சம்பளம் வழங்க வேண்டும் என்றனர்.