ADDED : செப் 12, 2024 05:11 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சித்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது.
இதில் மதுரை வல்லபா வித்யாலயா பள்ளி மாணவர்கள் வஷிசா, லிபா, விவேகா, தேஜஸ்வி, ரக்ஷிமா, பத்மபூரணி, யாஷிகா, அக்ஷரா, தேவ வர்ஷினி முதலிடம் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். டால்பின் எலைட் பள்ளி மாணவர்கள் முகமது இப்ராகிம், தர்ஷா, ஹவின் ராஜ், ஜெய் ஆகாஷ், தேஜஸ்வரன், லக்ஷன் முதலிடம் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர். மதுரை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க செயலாளர் கருணாகரன் பரிசு வழங்கினார். பயிற்சியாளர் சவுமியா பாராட்டினார்.
