ADDED : ஜூன் 26, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு 53. சிவில் வழக்குகளை விசாரித்து வந்தார்.
நேற்று முன்தினம் விசாரித்துக் கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனி அறைக்கு சென்றபோது மயக்கமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார்.