ADDED : ஆக 11, 2024 04:55 AM

அ நிறம் | அளவு
மதுரை : மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கராத்தே போட்டியில் மதுரை வேலம்மாள் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
17 வயதுக்குட்பட்ட ஆடவர் சண்டை பிரிவில் கவின் ராம் தங்கப்பதக்கம், கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 19 வயது சண்டை பிரிவில் கபிலராம் தங்கம் கட்டா பிரிவில் வெள்ளி வென்றார். 17 வயது சண்டை பிரிவில் செல்வ மணிகண்டன் பதக்கம் வென்றனர். இவர்களை இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் அங்குவேல் பாராட்டினர்.
