/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலிபோர்னியா செல்லும் மதுரை கேரம் வீராங்கனை
/
கலிபோர்னியா செல்லும் மதுரை கேரம் வீராங்கனை
ADDED : ஜூலை 31, 2024 04:48 AM

மதுரை, :   மதுரை சிம்மக்கல் சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளியின் பிளஸ் 2 மாணவி மித்ரா, நவ.,10 முதல் 17 வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடக்க உள்ள 6வது உலக கேரம் கோப்பைக்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் கேரம் சங்கம், இன்டர்நேஷனல் கேரம் பெடரேஷன் இப்போட்டிகளை நடத்துகின்றன. மதுரை மாவட்ட கேரம் சங்கம் சார்பில் தமிழக அணியில் பங்கேற்று இந்திய தரவரிசையில் மித்ரா 4ம் இடம் பெற்றார். உலக கேரம் கோப்பைக்கான போட்டிக்கு தேசிய அளவில் 8 பேர் தேர்வாகினர். இதில் தமிழகத்தில் இருந்து 3 பேர். மதுரையில் இருந்து முதன்முறையாக உலக கேரம் கோப்பையில் பங்கேற்கும் வீராங்கனை என்ற பெருமையை மித்ரா பெற்றார். இவர் கலிபோர்னியா செல்வதற்கான போக்குவரத்து செலவிற்கு அமைச்சர் உதயநிதி ரூ.1.50 லட்சம் வழங்கி வாழ்த்தினார்.
இம்மாணவியை பள்ளி முதல்வர் முனீஸ்வரி, உடற்கல்வி ஆசிரியை காஞ்சனா, கேரம் சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திகேயன் பாராட்டினர்.

