நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் 19வது அகில இந்திய மேலாண்மை தின விழா நடந்தது. தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார். தங்கமயில் ஜூவல்லரி பொது மேலாளர் மதன், பேராசிரியர் ஜோதி முருகனுக்கு ஹைடெக் குரூப் தலைமை செயல் அதிகாரி மதியழகன் விருது வழங்கினார்.
மாநகராட்சி உதவி நகர்நல அதிகாரி அபிஷேக், துணைத் தலைவர் முத்து வேலாயுதம், செயலாளர் ஆனந்த்குமார், தாசீம் பீவி அப்துல் காதிர் பெண்கள் கல்லுாரி, கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, அண்ணா பல்கலை மதுரை வளாக மேலாண்மை கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

