ADDED : ஜூலை 31, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 5 பேர்கையுந்து பந்து போட்டியில் தேசிய சாதனை புரிந்தனர்.
விளையாட்டுகளில் கிராமப்புற மாணவர்களை மேம்படுத்துவதற்காக எச்.சி.எல்., நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜூலை 21 முதல் 24 வரை தேசிய அளவில் கையுந்து பந்து போட்டிகளை சென்னையில் நடத்தியது. எச்.சி.எல்., அணிக்காக சுந்தரராஜா பள்ளி மாணவிகள் சசியா, சுசீலா, பிரியதர்ஷினி, அஸ்வதிஸ்ரீ, வான்மதி ஆகியோர் முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். அவர்களை கள்ளழகர் கோயில்துணை கமிஷனர் கலைவாணன், பள்ளி குழுத்தலைவர் செல்லதுரை பாராட்டினர். தலைமை ஆசிரியர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர்களும் பாராட்டப்பட்டனர்.