/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை நுாலகத்திற்கு10 லட்சம் பேர் வருகை: முதல்வர் பெருமிதம்
/
மதுரை நுாலகத்திற்கு10 லட்சம் பேர் வருகை: முதல்வர் பெருமிதம்
மதுரை நுாலகத்திற்கு10 லட்சம் பேர் வருகை: முதல்வர் பெருமிதம்
மதுரை நுாலகத்திற்கு10 லட்சம் பேர் வருகை: முதல்வர் பெருமிதம்
ADDED : ஆக 01, 2024 05:03 AM
சென்னை: மதுரையில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு நுாலகத்தின் வருகையாளர் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கடந்த ஆண்டு ஜூலை 15ல், கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் திறக்கப்பட்டது. இந்நுாலகத்திற்கு இதுவரை 10 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இது தொடர்பாக, முதல்வர் தன் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
மதுரையில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம், இத்தனை குறுகிய காலத்திற்குள், 10 லட்சம் வருகையாளர்களை கடந்துள்ளது பெரும் கிழ்ச்சி அளிக்கிறது. அறிவிற் சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கிய இந்த நுாலகம் போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும் நுாலகங்கள் அமைய உள்ளன.
அறிவுத்தாகம் கொண்டோரது தாகத்தை தணித்து, தமிழகத்தில் வாழ்வோரது சிந்தனையையும், வாழ்வையும், இத்தகைய நுாலகங்கள் வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.