/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் 'கழிந்தன'
/
11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் 'கழிந்தன'
ADDED : மே 05, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் தினமும் 20 முதல் 30 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகின்றன. இவை 4 இடங்களில் உரமாக மாற்றப்படுகிறது.
இதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் திருச்சி டால்மியா சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு எரிக்கப்பட்டு சிமென்ட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. நேற்று திருமங்கலத்தில் இருந்து 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டன. ஏற்பாடுகளை துாய்மை ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.