ADDED : ஜூன் 11, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் நேற்று காலை ரோட்டில் சென்ற 12க்கும் மேற்பட்டோரை ஒரே நாய் கடித்தது.
நேற்று காலை வெறி நாய் ஒன்று நடந்துச் சென்ற அதே ஊரைச் பிரபாகரன் 30, மாயாண்டி மகன் பிரபாகரன் 50, முத்து 30, பரணி 33, அன்னக்கொடி 55, போல் நாயக்கன்பட்டி சேர்ந்த மாயப்பன் 34, பிரித்திகா 4, உட்பட 12க்கும் மேற்பட்டோரை கடித்தது. காயமுற்றவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இப்பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.