/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் 1270 பேருக்கு 'மங்கி பாக்ஸ்' பரிசோதனை
/
மதுரையில் 1270 பேருக்கு 'மங்கி பாக்ஸ்' பரிசோதனை
ADDED : ஆக 24, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஆக., 17 முதல் நேற்று (ஆக.,23) வரை 1270 பயணிகளிடம் 'மங்கி பாக்ஸ்' வைரஸ் இருக்கிறதா என்பதற்கான முதற்கட்ட காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
குரங்கிலிருந்து மனிதர்களுக்கும் பின்னர் மனிதர்கள் மூலம் மற்றவர்களுக்கும் இந்த 'மங்கி பாக்ஸ்' காய்ச்சல் பரவுகிறது. குறிப்பாக நைஜீரியா, காங்கோ உட்பட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆக., 17 முதல் நேற்று (ஆக.,23) வரை 1270 பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் நோய் அறிகுறி இல்லை.