ADDED : ஜூன் 25, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் நகராட்சி கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கருத்தடை செய்யக்கோரி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கருத்தடை செய்ய ஒரு நாய்க்கு ரூ.1650 மற்றும் 24 மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் வால்வுகளை பராமரிக்கும் தற்காலிக பணியாளர்கள், தற்காலிக டிரைவர்களுக்கு சம்பளம் வழங்க தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு, அனைத்து தொழில்களுக்கும் வரி உட்பட 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.