/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மதுரை மாணவர்கள் 17 பேர் தேர்வு
/
தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மதுரை மாணவர்கள் 17 பேர் தேர்வு
தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மதுரை மாணவர்கள் 17 பேர் தேர்வு
தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மதுரை மாணவர்கள் 17 பேர் தேர்வு
ADDED : மே 09, 2024 05:43 AM

மதுரை: தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 17 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பாய்ன்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், புல் கான்டாக்ட் மற்றும் மியூசிக்கல் பார்ம் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.
இதில் மதுரை மாணவர்கள் 17 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களை வென்றனர்.பாயின்ட் பைட்டிங் பிரிவில் சம்யுக்தா, சாரா, அகில் குமார், ராஜவர்ஷினி, நிகிதா தங்கம் வென்றனர். தியான், யோகிதா, மோஷிகா நாச்சியார் வெள்ளியும்,ரக்சன், தஸ்வின், ஹர்ஷினி ஸ்ரீ, ஆதித்யா வெண்கல பதக்கம் வென்றனர்.
லைட் கான்டாக்ட் பிரிவில் யோக வர்ஷன், தவராம் தங்கமும், லக்க்ஷிதா, யோகேஷ் வெள்ளியும், ரோஹித், ஏஞ்சலின் ஆராதனா, விஷால், நரேஷ் வெண்கல பதக்கமும் வென்றனர்.
கிக் லைட் பிரிவில் ஜெய் சிம்ம வர்மன், அகமத், சந்திரா தங்கமும், சிவசரண், சுப்ரமணியம் வெள்ளியும், சிவதர்ஷினி வெண்கல பதக்கமும் வென்றனர்,புல் கான்டாக்ட் பிரிவில் விஷ்ணு பிரசாந்த், நவீன் குமார், பாலமுருகன் தங்கமும், யுவனேஸ்வரன், நித்திய மீனாட்சி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மியூசிக்கல், கிரியேட்டிவ் பார்ம் பிரிவில் நிகில், ஹர்ஜித், ஷிவானி, லக்சன் தங்கமும், ஷாஷினி, ஜாய் பிரசன்னா, ராஜ வெற்றிவேல் வெள்ளியும், ரித்திகா, ரோகன் முத்தையா, பிரணவ், பாவனாஸ்ரீ வெண்கல பதக்கமும் வென்றனர்.
மாநில அளவில் தங்கம் வென்ற மாணவர்கள் மே 21ல்புனேவில் நடக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். வென்ற மாணவர்களை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், துணைத் தலைவர் கார்த்திக், பயிற்சியாளர்கள் முத்துக்குமார், பிரபாகரன், சந்திரா பாராட்டினர்.