/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.1.80 லட்சம் பறிமுதல் சார்பதிவாளரிடம் விசாரணை
/
ரூ.1.80 லட்சம் பறிமுதல் சார்பதிவாளரிடம் விசாரணை
ADDED : மே 30, 2024 08:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி:தஞ்சாவூர் அருள்முருகன் 54. மதுரை மாவட்டம் மேலுார் மூவேந்தர் நகரில் தங்கி கருங்காலக்குடி பத்திரப்பதிவு அலுவலக சார் பதிவாளராக பணிபுரிகிறார். பத்திர எழுத்தர் மற்றும் பத்திர பதிவுக்கு வரும் மக்களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று மதியம் டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, குமரகுரு, மாவட்ட ஆய்வுகுழு அலுவலர் சிங்காரவேலன் , சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆவண காப்பக அறையில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அருள்முருகனிடம் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.