/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காய்கறி சந்தை கடைகளில் 195 கிலோ குட்கா, புகையிலை சகோதரர்கள் மூவர் கைது

ADDED : மே 09, 2024 08:37 AM
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சகோதரர்கள் நடத்தும் கடைகளில் இருந்து 195 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தல்லாகுளம் எஸ்.ஐ., அதிகுந்தகண்ணன் தலைமையில் போலீசார் ராதாகிருஷ்ணன், பாண்டீஸ்வரன் ஆகியோர் சட்டக்கல்லுாரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் பிளாஸ்டிக் பையை கீழே போட்டுவிட்டு தப்ப முயன்றார். அவரை பிடித்து விசாரித்தபோது புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் கொண்டு வந்தது தெரிந்தது.
விசாரணையில் அவர் தெப்பக்குளம் ராஜபாண்டியன் 42, என்பதும், சகோதரர்கள் ரத்னவேல் 42, ராஜகோபால் 38 ஆகியோருடன் இணைந்து குட்கா, புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது.
மூவரும் மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் 3 கடைகளை வாடகைக்கு எடுத்து பலசரக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை பாதுகாக்கும் கோடவுனாக கடைகளை பயன்படுத்தி வந்ததோடு, சந்தை வியாபாரிகள் சிலருக்கும், வெளியூர் வியாபாரிகளுக்கும் விற்று வந்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டனர். கடைகளில் சோதனையிட்டு 195 கிலோ புகையிலை, குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.