ADDED : ஆக 05, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் லிங்கப்பாண்டி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே போலீசாரைக் கண்டதும் 2 பேர் தப்ப முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லாபுரம் சதீஷ்குமார் 25, மாநகராட்சிகாலனி மாயகிருஷ்ணன் 30, என்பதும், அவர்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.