ADDED : மே 24, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: திருமங்கலம் மேலக்கோட்டை அருகே ரோட்டை கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தது. பொதுமக்கள் இதை மீட்டு சாப்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மான் இறந்தது.
இந்தப் பகுதியில் மற்றொரு ஆண் புள்ளிமான் ரோட்டை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.