/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கால் வெயிட்டிங்'கால் வந்த சந்தேகம் வைகையில் கொலை செய்த கொடூரம் போலீசாரிடம் 'பூசி மெழுகிய' கொத்தனார் உட்பட 2 பேர் கைது
/
'கால் வெயிட்டிங்'கால் வந்த சந்தேகம் வைகையில் கொலை செய்த கொடூரம் போலீசாரிடம் 'பூசி மெழுகிய' கொத்தனார் உட்பட 2 பேர் கைது
'கால் வெயிட்டிங்'கால் வந்த சந்தேகம் வைகையில் கொலை செய்த கொடூரம் போலீசாரிடம் 'பூசி மெழுகிய' கொத்தனார் உட்பட 2 பேர் கைது
'கால் வெயிட்டிங்'கால் வந்த சந்தேகம் வைகையில் கொலை செய்த கொடூரம் போலீசாரிடம் 'பூசி மெழுகிய' கொத்தனார் உட்பட 2 பேர் கைது
ADDED : ஜூன் 27, 2024 04:25 AM

மதுரை : மதுரை மாவட்டம் சிலைமான் அருகே கள்ளத்தொடர்பில் இருந்த பெண் சித்தாளை சந்தேகப்பட்டு நண்பருடன் சேர்ந்து கொலை செய்த கொத்தனார் கருப்பையா 45, நண்பர் ஜெயகாந்தன் 55, கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் தனக்கும், அப்பெண்ணுக்கும் சம்பந்தமில்லை என நாடகமாடியது தெரியவந்தது.
மதுரை சிலைமான் அருகே மேலசக்குடியைச் சேர்ந்த 28 வயது பெண், கட்டுமான பணியில் சித்தாளாக வேலை செய்து வந்தார். திருமணமானவர். திடீரென மாயமானார். ஜூன் 22ல் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிய நிலையில், நேற்றுமுன்தினம் அப்பகுதி வைகையாற்றில் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக சக தொழிலாளியான கொத்தனார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கருப்பையா 45, அவரது நண்பர் மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு ஜெயகாந்தன் 55, ஆகியோரை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்தார்.
போலீசார் கூறியதாவது: வேலை செய்யும் இடத்தில் அப்பெண்ணுடன் கருப்பையாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. தன்னிடம் மட்டுமே பேச வேண்டும் என்பதற்காக புது அலைபேசி வாங்கி கொடுத்துள்ளார். வேறு யாருக்கும் போன் எண்ணை தரக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார். ஆனால் அப்பெண்ணோ அந்த எண்ணை மற்றவர்களுக்கு பகிர்ந்து பேசி வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் கருப்பையா தொடர்பு கொண்டபோது 'கால் வெயிட்டிங்' வந்தது. சந்தேகப்பட்டு விசாரித்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமுற்ற கருப்பையா கொலை செய்ய திட்டமிட்டார்.
நண்பர் ஜெயகாந்தனை வைகையாற்றின் புதர் ஒன்றில் மறைந்திருக்குமாறு கூறிவிட்டு, அப்பெண்ணை வரவழைத்து 'நெருக்கமாக' இருந்துள்ளார். பின்னர் ஜெயகாந்தனை அழைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை அரைகுறையாக எரித்துவிட்டு இருவரும் தப்பினர்.
அப்பெண்ணின் அலைபேசி எண்ணை ஆய்வுசெய்தபோது கருப்பையாவுடன் அடிக்கடி பேசியது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது எனக்கும், அப்பெண்ணுக்கும் சம்பந்தமில்லை. தொழில்ரீதியாகதான் பேசுவோம். மற்றவர்களுடன் போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்' என எங்களை திசைதிருப்பும் நோக்கில் நாடகமாடினார். தொடர் விசாரணையில் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு கூறினர்.