/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காப்பகத்தில் இருந்த 24 குழந்தைகள் மீட்பு
/
காப்பகத்தில் இருந்த 24 குழந்தைகள் மீட்பு
ADDED : மார் 13, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா பி.செட்டியபட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் தனியார் விடுதி காப்பகம் உள்ளது.
இங்கு சில ஆண்டுகளாக முறையான பாதுகாப்பு மற்றும் உணவு, பராமரிப்பு வசதி இன்றி காணப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் உரிய பாதுகாப்பு வசதி இல்லாததால் 24 குழந்தைகளை மீட்டு மதுரையில் உள்ள அனுமதி பெற்ற காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.