/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்டத்தில் ரம்ஜான் நோன்புக்கு 272 டன் அரிசி
/
மாவட்டத்தில் ரம்ஜான் நோன்புக்கு 272 டன் அரிசி
ADDED : மார் 03, 2025 04:04 AM

மதுரை : மதுரை மாவட்டத்தில் ரம்ஜான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு 272 டன் பச்சரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முதல் முஸ்லிம்கள் நோன்பு துவக்கி உளளனர். ஒரு மாதம் இந்த நோன்பு கடைபிடிப்பதையொட்டி பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசு பச்சரிசி ஒதுக்கீடு செய்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 163 பள்ளிவாசல்களுக்கு நோன்பு கடைபிடிப்பதற்கு கஞ்சி தயாரித்து வழங்க அரசு 272.21 டன் பச்சரிசி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அரிசி கிலோ ரூ.1 வீதம் மானியத்தில் வழங்கப்படும். மாவட்டத்தில் வடக்கு தாலுகாவில் ஆனையூர், கூடல்நகர் பகுதி உட்பட சில இடங்களில் நேற்று முன்தினம் இரவு வரை அரிசி வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
மாவட்ட வினியோக அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், ''நோன்புக்காக கஞ்சி தயாரிக்க அரிசி கிடைக்காதது குறித்து எனது கவனத்திற்கும் வந்தது. அரிசி வினியோகத்திற்காக 3 நாட்களுக்கு முன்பே உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. 90 டன்னுக்கு 65 டன்தான் இருந்துள்ளது. 25 டன் பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்தது. இதுபற்றி நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். பேரையூர் பகுதியில் இருந்து குறித்த காலத்திற்குள் அரிசி அனுப்பி வினியோகிக்கப்பட்டுவிட்டது'' என்றார்.