ADDED : செப் 07, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தென்தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரோபோடிக் மூலம் 350 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் கூறியதாவது: 2018ல் இங்கு அறுவை சிகிச்சைக்காக 'கிளி ரோபோ' அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பொது அறுவை சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, மகளிர் நோய்கள், தலை, கழுத்து, மார்பு சிகிச்சைகளுக்கு ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் ரமேஷ் அர்த்தநாரி, மகாராஜன், பத்மா, மோகன், ஜெகதீஷ் சந்திர போஸ், சீனிவாசன், விஜயபாஸ்கர், பால் வின்சென்ட் முயற்சியால் 350 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் சாத்தியமாயின என்றார்.