/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகாலில் ரூ.5 கோடியில் லேசர் ஒலி ஒளிக்காட்சி
/
மகாலில் ரூ.5 கோடியில் லேசர் ஒலி ஒளிக்காட்சி
ADDED : மார் 29, 2024 06:20 AM
மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகாலில் விரைவில் லேசருடன் கூடிய நவீன ஒலி ஒளி காட்சி துவங்கப்பட உள்ளது.
தொல்லியல் துறை சார்பில் மகாலின் தரைத்தளம் தற்போது அகற்றப்பட்டு பழமை மாறாமல் புதிதாக டைல்ஸ் கற்கள் பொருத்தும் பணி நடக்கிறது.
தர்பார் ஹாலில் பணி நடப்பதையொட்டி அங்கு மாலையில் நடத்தப்பட்டு வந்த ஒலி, ஒளிக்காட்சி 20 நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.
புதுமையை புகுத்தும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் நவீன லேசர் ஒலி ஒளிக்காட்சி இங்கு அமைக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா வளர்ச்சி கழகம் இக்காட்சியை நடத்துகிறது. குஜராத் நர்மதை ஆற்றங்கரையில் உள்ள படேல் சிலையில் 3 டி வடிவில் காட்சிகள் தோன்றுவது போல இங்கும் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
தர்பார் ஹால் தரைத்தள பணிகள் முடிந்தவுடன் இரண்டு மாதங்களுக்குள் புதிய ஒலி ஒளி காட்சி துவங்கும். முதற்கட்டமாக காட்சி நேரம் 45 நிமிடத்தில் இருந்து 25 நிமிடமாக குறைக்கப்படும்.
அதற்கேற்ப மன்னர் வரலாறு குறித்தும் எழுதப்பட்டு சிறு மாற்றத்துடன் குரல் வடிவில் கொண்டு வரப்படும்.

