/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சென்றது 50 பேர்; பேசியது 2 பேர் விவசாயிகள் ஆதங்கம்
/
சென்றது 50 பேர்; பேசியது 2 பேர் விவசாயிகள் ஆதங்கம்
சென்றது 50 பேர்; பேசியது 2 பேர் விவசாயிகள் ஆதங்கம்
சென்றது 50 பேர்; பேசியது 2 பேர் விவசாயிகள் ஆதங்கம்
ADDED : மார் 07, 2025 07:10 AM
மதுரை : திருநெல்வேலியில் நடந்த தென் மண்டலங்களுக்கான வேளாண் பட்ஜெட் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் மதுரையில் இருந்து இருவருக்கு மட்டுமே பேச வாய்ப்பு அளித்ததாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
பாரதிய கிசான் சங்க மாநிலத்தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது: மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் 2024க்கான வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்த போது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 விவசாயிகளுடன் ஆன்லைன் முறையில் அமைச்சர் பன்னீர்செல்வம் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார். இந்த முறை திருநெல்வேலி கருத்து கேட்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்கு எங்கள் சங்கம் சார்பில் இருவர் தேர்வு செய்யப்பட்டோம். மொத்தம் 50 விவசாயிகள் மதுரையில் இருந்து சென்ற நிலையில் மாவட்டத்திற்கு இருவர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். இது சம்பிரதாயத்திற்கு நடந்த கூட்டம் போலிருக்கிறது.
வேளாண் விளைபொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. விவசாயிகள் உரம், பூச்சிக்கொல்லி மருந்தின் அளவை குறைத்து பயன்படுத்துவது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை கருத்து கேட்பு கூட்டத்தில் சொல்ல நினைத்த போது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.