/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
51 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை
/
51 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை
51 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை
51 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை
ADDED : மே 30, 2024 03:46 AM

மதுரை: மதுரை அப்போலோ மருத்துவமனை குழுவினர்51 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு சாதனை படைத்தனர்.
கல்லீரல் மாற்று சிகிச்சை செயல் திட்டத் தலைவர் டாக்டர் இளங்குமரன், மதுரை மண்டல தலைமை செயல் இயக்குனர் நீலகண்ணன் கூறியதாவது:
2015 முதல் தற்போது வரை சிறியவர்கள், பெரியவர்கள் உட்பட 51 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளோம்.
இதன் மூலம் மருத்துவத்துறையில் அப்போலோ மருத்துவமனை தனது நிபுணத்துவத்தை நிலைநாட்டியுள்ளது. ஒவ்வொரு சிகிச்சையிலும் நோயாளியின் உயிர் காப்பாற்றப்படுவது மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கும் புது நம்பிக்கையை அளிக்கிறோம்.
நோயாளிக்கேற்றாற்போல துல்லிய சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உண்டு. மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து தானம் பெற்று கல்லீரல் பொருத்தலாம்.
மற்றொரு முறையில் உயிரோடிருக்கும் கொடையாளியிடம் தானம் பெற்று செய்யப்படும் அறுவை சிகிச்சை. கல்லீரலில் இரண்டு பாகங்கள் உள்ளதால் அதில் ஒரு பாகத்தை தானமாக எடுத்தாலும் மீண்டும் உயிர்ப்பித்து வளரக் கூடிய தன்மையுடையது.
நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை கிடைப்பதை அப்போலோ சிறப்பு டாக்டர்கள் குழு உறுதிசெய்கிறது. அதனாலேயே 51 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை மைல்கல்லை எட்டியுள்ளோம்.
எங்கள் குழுவினரின்அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டாக இச்சாதனை அமைந்துள்ளது. மதுரையில் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தி சிறப்பான சிகிச்சை வழங்கி சேவையை அர்ப்பணித்து வருகிறோம் என்றனர்.
மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் பிரவீன் ராஜன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மதுசூதனன், மயக்கவியல்நிபுணர் குலசேகரன், கல்லீரல் நிபுணர் குமரகுருபரன், குடலியல் சிகிச்சை நிபுணர் ராஜேஷ் பிரபு, விற்பனை பொது மேலாளர் மணிகண்டன் உடனிருந்தனர்.