/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளஸ் 2 தமிழில் 610 மாணவர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 தமிழில் 610 மாணவர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 04, 2025 05:11 AM
மதுரை: மதுரையில் நடந்த பிளஸ் 2 தமிழ் தேர்வில் 610 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
மாவட்டத்தில் இத்தேர்வை 34691 மாணவர்கள் 108 மையங்களில் எழுதினர். மதுரை மத்திய சிறையில் தனியாக அமைக்கப்பட்ட மையத்தில் 32 கைதிகள் தேர்வில் பங்கேற்றனர். 230 மாணவர்களுக்கு (ஸ்கிரைப்) சொல்வதை கேட்டு எழுதுவதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழில் 610, அரபியில் 9, ஹிந்தியில் 4, சமஸ்கிருத்தில் 3 என 626 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தேர்வுக்கு முதல் நாளில் பல்வேறு விபத்துகளில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உட்பட 6 மாணவர்களுக்கு டாக்டர்கள் அளித்த சான்றிதழ் அடிப்படையில் கடைசி நேரத்தில் அவர்களை 'ஸ்கிரைப்'பாக மாற்றி ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதித்தது. 110 பறக்கும் படை அலுவலர்கள் தேர்வு மையங்களில் சோதனையிட்டனர்.
மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலரான இணை இயக்குநர் ஆஞ்சலோ இருதயசாமி, சி.இ.ஓ., ரேணுகா, தேர்வுத்துறை உதவி இயக்குநர் பிரதீபா ஆகியோர் தேர்வுப் பணிகளை கண்காணித்தனர்.