/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு 64 சவரன், பணம் கொள்ளை
/
ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு 64 சவரன், பணம் கொள்ளை
ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு 64 சவரன், பணம் கொள்ளை
ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு 64 சவரன், பணம் கொள்ளை
ADDED : ஜூலை 11, 2024 09:45 PM
பெருங்குடி:மதுரை நாகப்பா நகர் கார்த்திகேயன், 50. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி தவமணி, 47. சிவகங்கை மாவட்டம், கழுவங்குளம் அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இருவரும் பள்ளிக்குச் சென்றனர். இவர்களது மகள் கல்லுாரிக்கும், மகன் பள்ளிக்கும் சென்றனர். மதியம் 3:00 மணிக்கு மகள் வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பெற்றோர் வந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 20 சவரன், 4 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, மதுரை மேலுார் கீழையூர் ராமச்சந்திரன், 45. டில்லியில் சுகாதார ஆய்வாளராகவும், மனைவி ராதா, 42, டில்லி அரசு பள்ளி ஆசிரியையாகவும் உள்ளனர். இவர்களது மகன் ராகேஷ் பிரசன்னா, 22, சென்னையில் தங்கி எம்.டெக்., படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு ராகேஷ் பிரசன்னா வீட்டிற்கு வந்த போது முன்பக்க கிரில் மற்றும் மரக்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 44 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கீழவளவு போலீசார் விசாரிக்கிறார்.