/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு இலவச பஸ்களில் 80 கோடி முறை பயணம்
/
அரசு இலவச பஸ்களில் 80 கோடி முறை பயணம்
ADDED : மார் 09, 2025 03:40 AM
மதுரை : அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை கோட்டத்தில் மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம் 80 கோடி முறை பெண்கள் பஸ் பயணம் செய்துள்ளதாக கழக மேலாண் இயக்குநர் சிங்காரவேலு தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் 2400 பஸ்கள் இயக்கப்பட்ட போது மகளிர் விடியல் பயண திட்டத்தில் 4.5 லட்சம் பெண்கள் பயணித்தனர். தற்போது 7.5 லட்சம் பெண்கள் தினசரி பயணம் மேற்கொள்கின்றனர். 2021 - 2025 வரை 80 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். 702 புதிய பஸ்கள் இயக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் செல்லாத இடம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் 671 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.