ADDED : ஏப் 12, 2024 05:11 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் உணவு தேடி வந்த நாய், அங்கே கிடந்த பிளாஸ்டிக்டப்பாவுக்குள் இருந்த பாலிதீன் பையை பிடித்து வெளியே இழுக்க முயன்று தலையை நுழைத்து மாட்டிக்கொண்டது.
கோமதிபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தலைவர் ராகவன், விலங்குகள் நல ஆர்வலர் மயூர் மூலம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தார். சாக்குடன் நாயை பிடிக்க வந்த போது பயந்து ஓடியது. 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் 'டப்பா'வுடன் நாய் தலைகாட்டியது.
மாநகராட்சியில் அரசு தேர்வுக்கு படிக்க வந்த ஹரி, கருப்பசாமி, வல்லரசு ஆகியோர் நாயை பிடித்து டப்பாவை அகற்றினர்.
