
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் நேற்று இரவு நாணல் புற்களில் தீ பற்றி, அருகிலிருந்த பழைய மர கோடவுன் பற்றி எரிந்தது.
இப்பகுதியில் வர்த்தக நிறுவனங்களுக்குபின்பகுதி காலி இடங்களில் காய்ந்து கிடந்த புற்கள், மரம், செடி, கொடிகளில் நேற்று இரவு 7:00 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தல்லாகுளத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்தது.
தீ அப்பகுதி முழுவதும் பரவியது. வாகனத்தில் தண்ணீர் தீர்ந்ததால் அருகில் தென்கால் கண்மாயிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். தனியார் தண்ணீர் லாரிகளும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
அதற்குள் அருகில் செயல்படாமல் இருந்த பழைய மரக்கோடவுனில் தீ பரவி மரக்கடைகள் எரிந்தது. பின்னர் திருமங்கலம் தீயணைப்பு வாகனமும் வந்தது. இரவு 11:00 மணிக்கு பின்னரும் தீயணைப்பு பணி தொடர்ந்தது.