/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காட்சிப்பொருளான உயர்மின் கோபுர விளக்கு
/
காட்சிப்பொருளான உயர்மின் கோபுர விளக்கு
ADDED : ஜூன் 06, 2024 05:20 AM
கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டி மந்தையில் உயர்மின்கோபுர விளக்கு எரியாமல் கும்மிருட்டாக உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
கச்சிராயன்பட்டி மந்தையில் ஊராட்சி அலுவலகம், பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கோயில் உள்ளிட்டவை உள்ளன. அதனால் ஊராட்சி சார்பில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
இவ்விளக்கு ஆறு மாதங்களாக பயன்பாட்டில் இல்லை. அதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அப்பகுதியினர் கூறியதாவது: மின்கோபுர விளக்கு பயன்பாட்டில் இல்லாததால் இரவு நேரங்களில் கால்நடைகளைத் திருடிச் செல்கின்றனர். இக்கிராமத்தின் வழியாக பிறபகுதிகளுக்குச் செல்வோர், போதையில் கத்திக் கொண்டே டூவீலர்களில் 'பறக்கின்றனர்'.
விபத்து அபாயம் உள்ளதால், வீட்டில் உள்ளோர் வெளியில் வராமல் முடங்கிக் கிடக்கிறோம்.
மின்விளக்கு குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் ஆறுமாதங்களாக நடவடிக்கையே இல்லை.
அதனால் அச்சத்துடனே வசிக்கிறோம் என்றனர்.