ADDED : ஏப் 21, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்: கோடை சீசன் காலங்களில் ஜூலை 1ம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு மேட்டுப்பாளையம் - குன்னுார், ஊட்டி - குன்னுார், ஊட்டி - கேத்தி இடையே கூடுதல் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மலை ரயில் ஊர்ந்து செல்லும் அழகிய காட்சிகளை 'டிரோன்' வாயிலாக ரயில்வே நிர்வாகம் பதிவு செய்து வெளியிட்டுள்ளது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னுார் வரை எக்ஸ் கிளாஸ் இன்ஜின் ரயிலும், டீசல் இன்ஜினால் மலைகளுக்கு இடையே இயங்கும் ரயிலும், பசுமை தேயிலை தோட்டம், நீர்வீழ்ச்சி, பாறை குகைகள் வழியாக செல்லும் அழகிய காட்சிகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

